இளநரையைத் தடுக்கும் மருந்து

இளநரையைத் தடுக்கும் மருந்து

தலைக்கு அழகு சேர்ப்பது முடிதான். அந்த முடி கருகருவென இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதான். இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நம் உடலில் வைட்டமின் பி-5 சரியான அளவில் இருக்க வேண்டும். இதன் சமநிலை மாறும்போது, இளநரை பிரச்சனைகள் தலை தூக்கும்.

‘வைட்டமின் பி5’-யின் மற்றொரு பெயர், பென்டோதெனிக் அமிலம். இது எல்லா இயற்கை உணவுகளிலும் நிறைந்துள்ளது. அரிசி, கோதுமை, பயறுகள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பீன்ஸ், தக்காளி, சோயா பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி, பரங்கிக்காய் மற்றும் பச்சைநிறக் காய்கறிகளில் இது அதிகமாக உள்ளது. இவை தவிர கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், கேரட், காலி பிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டு இறைச்சி, ஈரல், முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளிலும் அதிகமுள்ளது.

இது செய்யும் அடிப்படை வேலை, நமது இயல்பான உடல் வளர்ச்சிக்குத் துணைபுரிவது. மற்ற வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. பென்டோதெனிக் அமிலம் கால்சியத்துடன் இணைந்து ‘கால்சியம் பென்டோதினேட்’ எனும் வேதிப்பொருளாக மாறிவிடும். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டியும் முடியின் நிறத்துக்குத் தேவையான நிறமிகளைத் தந்தும் முடி கருமையாக வளர்வதற்கு உதவுகிறது. இதனால், இளமையிலேயே தலைமுடி நரைப்பது தடுக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )