![முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/1-1.jpeg)
முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்வத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகத்துவாரம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.