நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நுவரெலியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்டு குறித்த மசாஜ் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 35 இற்கும் வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் வெளிமடை, இரத்தினபுரி. கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் தடுத்து வைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )