கௌரவமாக ரணில் வீடு செல்ல வேண்டும் !
சஜித் பிரேமதாசவை வீழ்த்த எண்ணாது கௌரவமாக ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு செல்லுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நேற்றைய திஹன மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தற்போது மக்கள் நிராகரித்த தரப்பினரே உள்ளனர்.
அதுவும் மக்கள் பணத்தை சுரண்டிய ரணில் விக்கிரமசிங்க சிறைக்கு அனுப்பும் வரை உறங்கப்போவதில்லை என கூறிய தரப்பினரே இப்போது ஜனாதிபதியுடன்
இருக்கின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியினரா தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் உள்ளனர்.
இல்லை அல்லவா ? வீட்டிற்கு செல்லும் போதாயினும் ஐக்கிய தேசிய கட்சியை பதிவிட்டு விட்டு செல்லும் பொறுப்பு இருந்தது.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி சின்னத்தில் கூட இல்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் சின்னமான யானைச் சின்னம் குறைந்த பட்சம் 2005இல் தேர்தல் பத்திரிகையில் மாத்திரமே இறுதியாக இருந்தது. ரணில் விக்கிரமசிங்க இந்த தேர்தலில் கூட யானைச்சின்னத்தில் போட்டியிடவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சின்னமான யானைச்
சின்னத்தை தூக்கியெறிந்துள்ளார் என்றே கூற முடியும்.
தற்போது சிறிகொத்த தலைமையகத்தில் கூட யானைச் சின்னம் இல்லை.
சஜித் பிரேமதாஸவை வீழ்ச்சிக்கு இட்டுச்செல்ல முயற்சிக்காது கௌரவமாக வீட்டுக்கு செல்வதே ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு செய்யும் சிறந்த உபாயமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.