தமிழரசு கட்சியும் எதிர்காலத்தில் பொது வேட்பாளரை ஆதரிக்கும் -ரெலோ

தமிழரசு கட்சியும் எதிர்காலத்தில் பொது வேட்பாளரை ஆதரிக்கும் -ரெலோ

ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு வடக்குகிழக்கில் பெருகி வருகின்றது. தென்பகுதியில் இருந்தும் அழைப்புகள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தெரிவித்துள்ளது.

தமிழ் பொதுப் வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் அதிகமானார்
ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும்
எம்முடன் இணைந்துகொள்ளும் எனவும்ரெலோ நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ரெலோ பேச்சாளர் சுரேன் குருசுவாமி தெரிவிக்கையில்,

எமது கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளர் சம்பந்தமான விடயங்களை எப்படி கொண்டு செல்வது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டதன் காரணமாக தென்பகுதியில் ஏற்படுகின்ற அழுத்தங்களினால் தென்பகுதி வேட்பாளர்களிடமிருந்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களும், கோரிக்கைகளும் வருகின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக வருகின்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது பற்றியும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

ஒரு வேட்பாளரை களம் இறக்கிய பின்னர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் அதாவது தெற்கில் இருக்கின்ற வாக்குகள் சமமாக பிரிக்கப்படுகின்ற போது குறித்த பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகபட்ச வாக்குகளை வழங்கினால் அதன் ஊடாக தங்களுக்கு ஏற்படுகின்ற நிலைமை குறிப்பாக இரண்டாவது வாக்கு எண்ணும் நிலையில்கூட வெற்றியடைய முடியாது என்ற நிலைமையை அவர்கள் உணர்கின்றனர்.

ஆகவே பொது வேட்பாளரை களம் இறக்கியமை எமக்கு வெற்றி. இதற்குப்பின்னர் அவர்களிடம் இருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக கட்சியில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

இருப்பினும் கட்சி எடுத்த ஒரு பொதுமுடிவில்தான் நாங்கள் அனைவரும்
பயணிக்கின்றோம். – என ரெலோ பேச்சாளர் சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )