விறகு ஏற்றிச் சென்ற லொறி மோதியதில் மாணவன் உயிரிழப்பு

விறகு ஏற்றிச் சென்ற லொறி மோதியதில் மாணவன் உயிரிழப்பு

விறகு ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதியதில் பாடசாலை மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹகும்புக்கடை செம்புகுளிய பிரதேசத்தில் வசிக்கும் 7ஆம் தரத்தில் கல்வி கற்ற சமிது வினோத் என்ற 12 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவனின் தந்தை லொறிகளுக்கு விறகு விநியோகம் செய்பவராக இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட உயிரிழந்த மாணவனின் தந்தை மற்றும் ஏனைய இளைஞர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )