
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட படிப்பை விசாரிக்க CIDக்கு உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்ட இளமாணி பட்டத்தை எவ்வாறு பெற்றார் என்பது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) உத்தரவிடப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டப் பட்டப் படிப்பை மேற்கொண்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.