
மின் கம்பத்தில் மோதுண்டு தீப்பிடித்த கார் !
கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த காரொன்று பாமன்கடை பகுதியில் வைத்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குப் பிறகு கார் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.