
ரணில் – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது நடைபெற்றது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் கூட்டாண்மை மாநாட்டிற்காக ஓமானுக்கு பயணம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை கையாள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS ColomboDr. S. JaishankarGovernmentHot NewsIndian External Affairs MinisterRanil wickremesingheSri lanka