
அதிகாலையில் டெல்லியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
டெல்லி, என்.சி.ஆர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டெல்லி, என்.சி.ஆர்(NCR) நகரில் இன்று அதிகாலை 5:36 மணியளவில் ஏற்பட்டது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் டெல்லிக்கு அருகில் அமைந்திருந்ததுடன் 5 கிலோ மீட்டர் ஆழத்தில்,ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததாகவும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
