
நீராடச் சென்ற மூன்று ரஷ்ய நபர்களில் ஒருவர் உயிரிழப்பு
கடற்கரையின் தடை செய்யப்பட்ட பகுதியில் நீராடச் சென்ற மூன்று ரஷ்ய நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இக்கடுவ நரிகம கடற்கரையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது
அலைகள் அதிகமாக காணப்படுவதால் தடை செய்யப்பட்டு சிவப்பு கொடிகள் நாட்டப்பட்டிருந்த போதும் ரஷ்யாவை சேர்ந்த மூன்று நபர்கள் அப்பகுதியில் நீராடச் சென்றுள்ளனர்
இதன் போது ஏற்பட்ட பாரிய அலையில் சிக்கி குறித்த மூன்று ரஷ்ய நபர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்
இருப்பினும் விரைந்து செயல்பட்ட கடல் பாதுகாப்பு பிரிவினர் அவர்கள் மூவரையும் மீட்டு பலபட்டிய ஆதரவைத்த சாலையில் அனுமதித்துள்ளனர்
இருப்பினும் ரஷ்யாவை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குறித்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
CATEGORIES Main News