வீண் ஆடம்பரமும் வறுமையே : உலகமே கொண்டாடும் சாதனை நாயகன் சாடியோ மானேவின் மறுபக்கம் !

வீண் ஆடம்பரமும் வறுமையே : உலகமே கொண்டாடும் சாதனை நாயகன் சாடியோ மானேவின் மறுபக்கம் !

செனகல் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்
சாடியோ மானே (Sadio Mané).

32 வயதான இவர், வாரத்திற்கு 14 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆண்டில், டிஸ்பிளே உடைந்த தொலைபேசியுடன் பல இடங்களுக்கு சாடியோ மானே (Sadio Mané) செல்லும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவந்தது.

இது குறித்து ஒரு நேர்காணலில் அவரிடம் கேட்டபோது,

“நான் அதைச் சரிசெய்வேன். டிஸ்பிளே மாற்றி விடுவேன்”
என்றார்

இதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் , நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும் ? பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய தொலைபேசி ஒன்றே வாங்கலாமே” என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சாடியோ மானே (Sadio Mané),

“என்னால் 1,000 தொலைபேசிகள் , 10 ஃபெராரிஸ் (Ferrari), 2 ஜெட் விமானங்கள், எண்ணற்ற டயமண்ட் கடிகாரங்கள் என எல்லாம் வாங்க முடியும், ஆனால் இவற்றையெல்லாம் நான் ஏன் வாங்க வேண்டும்?

நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன் ,சாப்பாட்டிற்குக் கஷ்டப்பட்டுள்ளேன் ,என்னால் படிக்கக்கூட முடியாத அளவுக்கு வறுமை என்னைச் சூழ்ந்திருந்தது .

அணிவதற்குக் காலணிகள் கூட வாங்க முடியாமல் வெறுங்காலுடன் விளையாடியுள்ளேன்.

நல்ல உடைகள் இல்லாமல் இருந்துள்ளேன் ,பட்டினி கிடந்துள்ளேன்.

ஆனால், இன்று நான் நிறைய பணத்தைச் சம்பாதிக்கிறேன் அதனால்தான் சம்பாதிக்கும் பணத்தில் இளம்தலைமுறை கல்விகற்க பாடசாலைகளை உருவாக்கியுள்ளேன்.

என் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்குப் புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்கிறேன்.

வசதியாக பகட்டாக ஆடம்பரமாக நான் தனித்து வாழ்வதற்குப்
பதிலாக அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.”
என சாடியோ மானே (Sadio Mané) தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த குணம் தான் உலகமே இன்றுவரை இவரை கொண்டாட சாதனை நாயகனாக வலம் வருகிறார் என ரசிகர்கள் இன்று வரை பாராட்டி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )