
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்!
தமிழகத்தின் நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.