ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடு !

ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடு !

ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.

முதல் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த போட்டியில் கடந்த முறை செம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.

இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )