தபால் மூல வாக்குப்பதிவு இன்று முதல் ஆரம்பம்
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று தமது தபால் மூலம் வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல்கள் ஆணைக் குழு குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினத்துக்கு மேலதிகமாக 06ஆம் திகதியும் தபால்மூலம் வாக்குகளை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலுமுள்ள ஊழியர்களுக்கான தபால்மூல வாக்குப்பதிவு நாளை (05)மற்றும்
நாளை மறுதினம் (06) நடைபெறவுள்ளன.
இத் திகதிகளில் தபால்மூலம் வாக்குகளை அடையாளப்படுத்த முடியாத வாக்காளர்கள், எதிர்வரும், 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில், தாம் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள
மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தமது தபால்மூல வாக்குகளை அடையாளப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும்.
இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு 7,12,319 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், குருணாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76,977 பேர் தகுதி பெற்றுள்ளனர்.