வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் அகற்றப்படும் !

வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் அகற்றப்படும் !

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளை வாகனங்களில் ஒட்டுவது சட்டவிரோதமானதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களிலுள்ள சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உறுதியாக இணைக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை அகற்றுவது வாகனத்திற்கு சேதம் விளைவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொலிஸாரின் இவ்வாறான தலையீட்டைத் தவிர்க்க வாகன உரிமையாளர்கள் தாமாக முன்வந்து இந்த விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ கேட்டுக் கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )