
கணேமுல்ல சஞ்சீவ கொலை : மேலும் இருவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவரான டொன் ஜனக உதய குமார, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை கடுவெலயிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்ற சாரதி எனக் கூறப்படுகிறது.
மற்றைய சந்தேக நபரான ஹசித ரொஷான் அத்துருகிரி பொலிஸ் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கையையும் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அதன்படி இந்த கொலையில் தொடர்புடைய 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.