
சம்பியன்ஸ் தொடர் நாளை ஆரம்பம்
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
8 அணிகள் இடையிலான 9ஆவது ஐ. சி. சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடத்தப்படுகிறது.
நாளை புதன்கிழமை பிற்பகல் 02. 30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் டுபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன.
இதில், உலகம் முழுவதும் கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியினர் கடந்த 15 ஆம் திகதி டுபாய் புறப்பட்டுச்சென்றனர்.
இதனையடுத்து டுபாயில் நேற்று முன்தினம் முதல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
CATEGORIES Sri Lanka