
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வியாழனன்று கிளிநொச்சியில் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினர்கள் நாளை மறுதினம் வியாழக்கிழமை கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
தமது உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பித்த போராட்டம் 9 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியே இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க
வேண்டும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்
தலைவி யோ. கனகரஞ்சினி கேட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒன்பது ஆண்டுகளாக எங்களுடைய பிள்ளைகளை மீட்ப தற்கு பல்வேறு வழிகளிலும்
போராடி சர்வதேசத்திற்கு உண்மை நிலைமைகளை எடுத்து கூறி வருகின்றோம்.
தமது பிள்ளைகளை தேடிய 300ற்கும் மேற்பட்ட தாய்,தந்தையர்கள் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூரில்எமக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரிலும்
பிரச்னைகளை முன்வைத்து வருகின்றோம்.
அரசாங்கத்துடன் பேசுவதாக சொல்லி கால இழுத்தடிப்பையே செய்கின்றனர்.
பிள்ளைகளை காணாது இறந்த தாய் தந்தையரைப் போல – மாரித்தவளைபோல்
நாங்களும் கத்திவிட்டு இறந்து விடுவோமோ என்ற ஏக்கம் உள்ளது.
இனிவரும் கூட்டத்தொடரிலாவது ஜனாதிபதி சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்று
பெற்றுத்தருவதற்கு முன்வர வேண்டும்.
பல தலைவர்களை இந்த ஒன்பது வருடங்களில் கண்டுள்ளோம்.
இவர்கள் தெற்குக்கு ஒரு நீதியும் வடக்குக்கு ஒரு நீதியும் வழங்குகின்றனர்.
எனவே எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில்போராட்டம் ஆரம்பிக்கப்
பட்டு ஒன்பது வருடங்கள்நிறைவடைகின்றன.
இந்தநிலையில், நீதி வேண்டி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம்.
இந்தப் போராட்டத்துக்கு அனைவரும் வலுச்சேர்க்க வேண்டும் – என்றார்