
பாணின் விலை குறைப்பு
பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம், மற்ற பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.