சீனாவில் கன மழையால் 240,000 பேர் வெளியேற்றம் !
சீனாவில் கடும் மழையால் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கடும் மழை காரணமாக 250,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
யாங்ட்சி உள்ளிட்ட ஆறுகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சீனா மோசமான பருவநிலையை எதிர்நோக்கி வருகிறது.
தொடர் கனமழை, அனல் காற்று ஆகியவற்றால் அந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வகைகளை அதிக அளவில் வெளியேற்றும் நாடு சீனா.
அது, பருவநிலை மாற்றத்துக்கு வழிவிடுவதாகவும் தீவிரமான, மேலும் கீழுமான வானிலை நிகழ்வுகளை அடிக்கடி ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடும் மழையால் அன்ஹுய் மாநிலத்தில் 991,000 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
TAGS China rainstormsEarthEnvironmentextreme weather conditionsHot Newsstate mediaweatherXinhuaYangtze