பூமி சுற்றுவது நின்றால் என்ன நடக்கும்?
நாம் தினமும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் இதற்கு அர்த்தம் நம்முடைய பூமி சுழன்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஒரு வேளை இந்த பூமி திடீரென தன்னுடைய சுழற்சியை நிறுத்திக்கொண்டால் என்ன ஆகும்? நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய பேரழிவு உண்டாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரியனை சுற்றி வரும் உருண்டை வடிவிலான குறிப்பிட்ட அளவை விட பெரியதாக இருக்கும் அனைத்தும் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இதுவரை ஏராளமான ஆய்வுகளை விண்வெளியில் செய்திருக்கிறார்கள் ஆனால் தற்போது வரை எங்கும் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே பூமிதான் தற்போதைய ஆய்வுகளின் படி உயிரினங்கள் வாழும் ஒரே கோளாக கருதப்படுகிறது.
பூமியில் சுழற்சி இல்லாவிட்டால், ஒரு பக்கம் இருட்டாகவும், மறு பக்கம் சூரிய வெளிச்சம் எப்பவும் நிரந்தரமாக இருந்துவிடும். இதன் காரணமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் வெளிச்சம் இருக்கும் ஒரு பக்கத்தை மொட்டை அடித்துவிடும்.
அதாவது புற ஊதா கதிர்கள் வீசும் இடங்களில் செடி கொடிகள் உட்பட எந்த உயிரினங்களும் வாழாது.
மறு பக்கம் சூரிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும். இங்கும் செடி கொடிகள் முளைக்காது.
எனவே பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது பூமி சுழலவில்லை என்றால் இந்த பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.