
தெஹிவளை ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து
தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
நேற்று (18) இரவு சுமார் 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாததால், பின்புறத்தில் தொடங்கிய தீ, முன் மற்றும் மேல் தளங்களுக்கு பரவி, அருகிலுள்ள சோலார் மின் சாதனக் கடையை முற்றிலுமாக அழித்தது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் நிறுவனத்திற்குள் நுழைய முடியாததால் தீ பரவியது.
கொழும்பு, கோட்டே, மொரட்டுவ மற்றும் தெஹிவளையில் இருந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் இன்று அதிகாலை 5 மணி வரை அருகிலுள்ள கட்டிடங்களுக்கு தீ பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர்.
CATEGORIES Sri Lanka