
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு ; குற்றவாளி கனேமுல்ல சஞ்சீவ பலி
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை புஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து அளுத்கடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்ட நிலையில் சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
