கந்தளாயில் பல உணவக உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை
கந்தளாய் பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பல உணவக உரிமையாளர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பொது சுகாதார பிரிவினரால் 46 கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, கந்தளாய் நகரம், பேராறு போன்ற பிரதேசங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கையின் போது, வெதுப்பகங்கள், உணவகங்கள், சில்லறை கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்றும் மரக்கறிக் கடைகள் உள்ளிட்ட உரிய தரம் இல்லாத எட்டு கடைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.