எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

புதுக்கடை  நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தமக்கு பலரால்  கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளோம். எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போதும் எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 இந்த விவகாரம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )