பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதித்துவத்தை வழங்குங்கள் 

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதித்துவத்தை வழங்குங்கள் 

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் பங்கேற்பதை விட, எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும், அதனால் அரசாங்கமும் எதிர்க்கட்சியின் பிரதான பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடிய சூழல் உருவாகும் என்றும், அதன் மூலம் எவ்விதப் பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
எனவே, அரசாங்கத்தின் பிரதான பிரதிநிதிகள் மற்றும் எதிரணியில் உள்ள 12 கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவொன்றை உருவாக்குமாறும், ஆளும் கட்சி மற்றும் எதிரணியில் உள்ள 12 கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்து, நியாயமான கூட்டுப் பேச்சுவார்த்தையை நடாத்தி, பிரச்சினை ஏற்படாத வகையில் இதற்குத் தலைமைத்துவத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )