சில பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் தடை

சில பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் தடை

பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த நேற்று முன்தினம் (22) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடம் விசாரித்த போது தற்போதைய வறண்ட வானிலை காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் டி.பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

அதை மீட்டெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதுவரை, குறித்த பகுதிகளுக்கு பவுசர் மூலம் நீர் விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)