
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக நீதித்துறையை சேர்ந்த பலர் விசாரிக்கப்படுவார்கள்
நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதித்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் உடன் தொடர்புடைய சிலரை நாங்கள் ஏற்கனவே கைது செய்துள்ளோம். அரசாங்கம் இந்த சம்பவத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று அமைச்சர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.