
சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து சீன பிரஜையின் சடலம் மீட்பு
கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து இரத்தக் கறைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
கொம்பனித் தெருவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் குறித்த சீன நாட்டவர் இவ்வாறு உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka