கணேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு குற்றவியல் பிரிவில் பொறுப்பிலிருந்த சந்தேகநபர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதையடுத்து, மூன்று சந்தேகநபர்களையும் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)