இந்தியாவில் 144 தடை உத்தரவு
பிரதமராக நரேந்திர மோடி இன்று (09) பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லியில் இன்றும் (09), நாளையும் (10) அமுலாகும் வகையில் 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அங்கத்துவம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைப்பதற்கு 272 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைப்பதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன. இதன் அடிப்படையில் ஆட்சியமைப்பதற்கான கோரிக்கையை ஜனாதிபதியிடம் நரேந்திர மோடி முன்வைத்தார்.
அதற்கு ஜனாதிபதியும் அனுமதியளித்த நிலையில் நாளைய தினம் இந்திய பிரதமராக நரேந்திர மோடி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பதவியேற்கவுள்ளார்.
இந் நிலையில் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு டெல்லியில் ஆளிலில்லா விமானங்களை பறக்கவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.