இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : ஓமானை வீழ்த்தியது ஸ்காட்லாந்து !

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : ஓமானை வீழ்த்தியது ஸ்காட்லாந்து !

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் ஓமான் அணியை ஸ்காட்லாந்து அணி 07 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நேற்றைய தினம் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி 20 ஓவர்கள் நிறைவில் ஓமான் அணி 07 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பதிவு செய்தது.

ஓமான் அணி சார்பில் பிரதிக் அதவலே (Pratik Athavale) 54 ஓட்டங்களையும் அயன் கான் (Ayan Khan)41 ஓட்டங்களையும்
அகிப் இல்யாஸ் (Aqib Ilyas) 16 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்துவீச்சில் ஸ்காட்லாந்து அணி சார்பில் சஃப்யான் ஷெரீப் (Safyaan Sharif) இரண்டு விக்கெட்டுகளையும் கிறிஸ் க்ரீவ்ஸ் (Chris Greaves) மற்றும் பிராட் வீல் (Brad Wheal) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய
ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவர்கள் நிறைவில் 153 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டது.

ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராண்டன் மெக்முல்லன் (Brandon McMullen) 61 ஓட்டங்களையும் ஜார்ஜ் முன்சி (George Munsey)
41 ஓட்டங்களையும் மைக்கேல் ஜோன்ஸ் (Michael Jones)
16 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்துவீச்சில் ஓமான் அணி சார்பில் பிலால் கான் (Bilal Khan) , மெஹ்ரான் கான் (Mehran Khan) மற்றும் அகிப் இல்யாஸ் (Aqib Ilyas) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )