20 ஆண்டுகளாக தினமும் சிமெண்ட்- செங்கலை சாப்பிடும் பெண்
மனிதர்கள் பல்வேறு விடயங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்ததே. வினோதமான விடயங்களை செய்பவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிக்கத் தவறுவதில்லை.
அந்த வகையில் பெண் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக சிமெண்ட், செங்கல், கல், மண் ஆகியவற்றை தின்பண்டமாக தினமும் சாப்பிட்டு வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா ?
ஆம், பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் என்ற பெண் சுவை நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
இவைகளை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பாட்ரிஸ், வீட்டில் உள்ள சுவர்களை உடைத்து அதில் உள்ள செங்கல் சிமெண்ட் உதிரிகளையும் சாப்பிட்டு வருகிறாராம். அவரது கணவர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்ரிஸால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.
இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ். சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிடத்தூண்டும் இந்த குறைபாட்டுக்கு பிக்கா என்பது மருத்துவப்பெயர்.
தனது 18 வது வயதில் பிக்கா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாட்ரிஸ் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.