போர் கேபினட்டை கலைத்தார் நேதன்யாகு
ஹமாஸ் அமைப்பினர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.
காசா மீதான தாக்குதல் இஸ்ரேலின் முழு ஒத்துழைப்பு மற்றும் சம்மதத்துடன் நடைபெற வேண்டும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு விரும்பினார். இதனால் போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அனைத்து கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட போர் கேபினட் நேதன்யா தலைமையில் அமைக்கப்பட்டது.
இந் நிலையில் முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் வெளியேறிய நிலையில் போர் கேபினட்டை கலைப்பதாக நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News