விமான நிலையத்துக்கே சென்று புதினை வரவேற்ற கிம் ஜாங் உன்

விமான நிலையத்துக்கே சென்று புதினை வரவேற்ற கிம் ஜாங் உன்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின்  வருகையையொட்டி, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் விமான நிலையத்திற்கு விரைந்தார்.

வட கொரிய தலைநகர் பியாங்காங் விமான நிலையத்தற்கு வந்த ஜனாதிபதி புதினை நேரடியாக சென்று வரவேற்ற கிம் ஜாங் உன், ஜனாதிபதி புதினுக்கு சிறப்பான வரவேற்பை அளித்துள்ளார்.

பயணத்திற்கு முன்பு ரஷ்ய தொலைகாட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி புதின், வட கொரியா ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலக போருக்கு பின் உருவாக்கப்பட்ட வட கொரியாவுடன் ரஷ்யா நீண்ட காலமாக நட்புறவில் இருந்து வருகிறது. மேலும், 2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து, ரஷ்யா மற்றும் வட கொரியா இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )