மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த பாதயாத்திரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஆரம்பம்
வரலாற்று பிரசித்தி பெற்ற ‘சின்னக்கதிர்காமம்’ என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த பாதயாத்திரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை காரைதீவிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.
மண்டூர் முருகன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 19 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளது.
காரைதீவில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் பாதயாத்திரை நடைபெறுவது வழக்கம்.
காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்த பாதயாத்திரையை வருடாந்தம் நடத்தி வருகிறது.
காரைதீவில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் பாதயாத்திரை நடைபெறுவது வழக்கம்.
காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்த பாதயாத்திரையை வருடாந்தம் நடத்தி வருகிறது
காரைதீவிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் பாதயாத்திரை கல்
முனை, நற்பிட்டிமுனை, சேனைக் குடி யிருப்பு, கிட்டங்கி நாவிதன்வெளி, வேப்பையடி, தம்பலவத்தை ஊடாக மண்டூர் முருகன் ஆலயத்தை சென்றடையும்.