தபால் முத்திரை விலை அதிகரிப்பு ?
தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்காக திரைசேறியின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 2022 வரை 15 ரூபாயாக இருந்த முத்திரையின் குறைந்தபட்ச விலை தற்போது 50 ரூபாயாக உள்ளது. ,இதனால் தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து வருவதனால் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.