மொட்டை மாடியில் ரொட்டி தயாரித்த ஸ்பைடர்மேன்

மொட்டை மாடியில் ரொட்டி தயாரித்த ஸ்பைடர்மேன்

சூப்பர் ஹீரோ ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் ‘ஸ்பைடர்மேன்’ வேடம் அணிந்து வித்தியாசமான செயல்களை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக அடிக்கடி பரவுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ‘ஸ்பைடர்மேன்’ வேடம் அணிந்த ஒருவர் மொட்டை மாடியில் அமர்ந்து ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ஒரு குடியிருப்பின் மொட்டை மாடியில் ‘ஸ்பைடர்மேன்’ வேடம் அணிந்த ஒருவர் ரொட்டிகளை உருட்டி அவற்றை அடுப்பில் வைத்து ரொட்டி சமைக்கும் காட்சிகள் உள்ளது.

வைரலாகி வரும் இந்த வீடியோ பயனர்களை ரசிக்க செய்துள்ளது. ஒரு பயனர் நகைச்சுவையாக, ‘ஸ்பைடர்மேன் அம்மா வீட்டில் இல்லை’ என்று பதிவிட்டார். மற்றொரு பயனர், ‘ஸ்பைடர்மேன் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்’ என கூறியிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )