வீட்டுக்குள் வெறுங்காலில் நடப்பவரா நீங்கள் ?

வீட்டுக்குள் வெறுங்காலில் நடப்பவரா நீங்கள் ?

வீட்டில் வெறுங்காலுடன் நடப்பது என்பது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், சிலரது வீடுகளில் குளுமையான டைல்ஸ், சூடான கார்பெட்ஸ்களில் வெறுங்காலுடன் நடந்து, அந்த உணர்வை அனுபவிக்கிறார்கள்.

ஆனால், இது அதிகமான தீங்கை விளைவிக்கும்.

வெறுங் கால்களால் நடப்பதன் ஆபத்துக்கள்

நோய்க்கிருமிகள்/ஒவ்வாமை – என்னதான் வீடுகள் சுத்தமாக இருப்பதைப் போன்று தோன்றினாலும் கிருமிகள் இருக்கத்தான் செய்கின்றன.இது பக்டீரியா, பூஞ்சை போன்ற நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்துவதோடு, தோல் எரிச்சல்களுக்கும் வழிவகுக்கும்.

முதுகு வலி – காலணிகளின் ஆதரவு கால்களுக்கு கிடைக்கவில்லையென்றால், அது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, முதுகு வலியை ஏற்படுத்தும்.

காலில் காயங்கள் – காலில் செருப்பில்லாமல் நடக்கும்பொழுது அது கால் விரல்களில் காயத்தையோ, அல்லது கூர்மையான பொருட்களை மிதிக்கவோ வழிவகை செய்துவிடும்.

குதிகால் வெடிப்பு – காலணிகள் அணியாதபட்சத்தில் வறண்ட மற்றும் கடினமான பரப்புக்களில் நடக்கும்பொழுது உராய்வுக்கு ஆளாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )