கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்

கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்

உடல் பாகங்களில் கண்கள் மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், தற்கால இளைஞர்களில் அதிகளவானோர் கண்களை சரியாக பராமரிப்பதில்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை.

அவ்வாறான பிரச்சினைகளைத் தடுக்க கண்களைக் காக்க சில குறிப்புகள்.

  • தினமும் 8 மணித்தியாலம் உறங்குவது கண்களுக்கு ஓய்வைக் கொடுக்கும்.
  • வருடத்துக்கு ஒரு தடவை கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
  • வாரத்துக்கு இரண்டு தடவைகள் கீரை, பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை போன்ற உணவுகளை உண்ண வேண்டும்.
  • ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒரு தடவை 20 வினாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும்.
  • பயணங்களின்போது புத்தகங்கள் படிப்பதை தவிர்க்கவும்.
  • வெளியில் செல்லும்போது சன் க்ளாஸ் அணிந்து செல்லவும்.
  • கண்களை மூடி விரல் நுனிகளால் கண் இமைகளை அழுத்திவிட வேண்டும்.
  • அதிக நேரம் தொலைக்காட்சி, தொலைபேசி பார்த்தலை தவிர்க்க வேண்டும்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )