கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று வெளியீடு !

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று வெளியீடு !

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுக அரசு விமர்சையாகக் கொண்டாடி வருகிறது.

அதன் ஒரு பகுதியாகக் இன்றையதினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதியின் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது.

இன்று மாலை 6.50 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாணயத்தை வெளியிடவுள்ளார்.

இந்த விழாவில், அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர் மற்றும் துணை மேயர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )