சுவையான மில்க் புடிங்

சுவையான மில்க் புடிங்

பால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அதிலும் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்.

ரொம்ப ஈஸியான மில்க் புடிங் எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பால் – இரண்டு கப்
  • சோள மா – முக்கால் கப்
  • சீனி – முக்கால் கப்

செய்முறை

முதலில் பாத்திரமொன்றில் பாலை ஊற்றி, அதில் சோள மாவைப் போட்டு கட்டிகள் இல்லாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

பின் சீனியைச் சேர்த்து கரையும் வரை கிளறவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள பாலை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

கலவை சற்று கெட்டியானதும் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சுற்றிவர பட்டர் தடவி பால் கலவையை அதில் ஊற்ற வேண்டும்.

பின்னர் அப் பாத்திரத்தை ப்ரீசரில் இரண்டு மணித்தியாலம் வைக்க வேண்டும். இரண்டு மணித்தியாலம் கழித்து வெளியில் எடுத்தால் மில்க் புடிங் ரெடி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )