பொசன் பௌர்ணமி  தினத்தில் விசேட பாதுகாப்பு

பொசன் பௌர்ணமி தினத்தில் விசேட பாதுகாப்பு

இலங்கையில் பொசன் பௌர்ணமி தினம்  நாளை (21) கொண்டாடப்படவுள்ள நிலையில்  நாடளாவிய ரீதியில் 296 தோரணைகளும் 4600 பதியப்பட்ட தன்சல்களும் ஏற்றபாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அனுராதபுர -மிஹிந்தலை ஆகிய புனித பிரதேசங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

பொசன் பௌர்ணமி காலத்தில் அனுராதபுரத்திற்கு வரும் யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்காக 800 உயிர்காப்பாளர்கள் கொண்ட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் பூஜா நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை உள்ளிட்ட பிரதான ஏரிகளைச் சுற்றி உயிர்காப்பாளர்கள் 600 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் பீ.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மிஹிந்தலை மற்றும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் 60 சிவில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸவா குளம், பசவக்குளம் குளம் மற்றும் கண்டி ஏரிக்கு அருகாமையில் உயிர்காப்புக் குழுவினரின் 130 உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் பக்தர்கள் குளிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், பொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக இன்று (20) முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார் .

இதேவேளை, இந்த ஆண்டு பொசன் போயா தினத்தினை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )