800 ரூபாவுக்கு வடையை விற்றவர் இன்று நீதிமன்றுக்கு

800 ரூபாவுக்கு வடையை விற்றவர் இன்று நீதிமன்றுக்கு

வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி 800 ரூபாவுக்கு வடையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் இன்று (19) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

இதற்கமைய அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

 வெளிநாட்டு சுற்றூலாப் பயணி ஒருவருக்கு குறித்த சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார். 

இதனையடுத்து குறித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாவை பெற்றுக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, வடையை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை வழக்கு தொடர்ந்துள்ளது. 

பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதற்கமைய இன்று குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )