பேன் தொல்லையா ?
முடியின் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும் காரணிகளில் பேன் மற்றும் ஈறு போன்றவையும் உள்ளடங்கும்.
பேன் இருந்தால் அது அப்படியே பொடுகுக்கு வழிவகுக்கும்.
தலையில் பேன் இருந்தால் அதன் மூலம் அரிப்பு, சொறி, கொப்புளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பேனையும் விரட்டியடிக்க வேண்டும் ஆனால் முடிக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றால், அதற்கு வசம்பு சிறந்தது.
பேன் என்பது தலையிலிருக்கும் சிறிய வகை பூச்சி. இது தலை முடியில் மட்டுமல்லாமல் இமை, கண் புருவம் ஆகியவற்றிலும் காணப்படும்.
பேன் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுடன் நெருங்கிப் பழகும்போது, மற்றவர்களுக்கும் அது தொற்றும் பாதிப்பு அதிகம்.
அதற்கு வசம்பு சிறந்த தீர்வாக இருக்கும்.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து மருந்தாக பயன்படும் மூலிகைகளுள் வசம்பும் ஒன்று. வசம்பு, தலையிலுள்ள பொடுகை நீக்கி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் ஆன்டி – பக்டீரியல் பண்புகளினால் உச்சந்தலை தொற்றை குணப்படுத்தும்.
இதனை எவ்வாறு தயார்செய்ய வேண்டும்?
வசம்பை வாங்கி, அதனை பொடியாக்கி, குச்சியைப் போல் அழுத்தமாக இருக்கும்போது இதனை இடித்துக்கொள்ள வேண்டும். இடித்ததன் பின்னர் உரலில் போட்டு இயன்றவரை பொடியாக்க வேண்டும்.
இதனை தேவையான நேரங்களில் மட்டும் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
எவ்வாறு தலைக்கு போட வேண்டும்?
முதலில் சிக்கில்லாமல் தலையை சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் இடித்து வைத்துள்ள வசம்புப் பொடியை எடுத்து உச்சந்தலையில் நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.
பின்னர் மெல்லிய வெள்ளைத் துணியொன்றை எடுத்து தலையில் கட்டவும். இரவு முழுவதும் அப்படியே இருந்துவிட்டு, காலை எழுந்து பார்த்தால் அந்த வெள்ளைத் துணி முழுவதிலும் தலையிலிருந்த பேன் இறந்து வெளிவந்திருக்கும். இதனை வெந்நீரில் அலசவும். ஷெம்பூ உபயோகப்படுத்த வேண்டாம்.