தேர்தல் போட்டியில் நீடிப்பேன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான ஜனனாயக கட்சி வேட்பாளராக ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்புடன் தேர்தலுக்கான முதல் விவாதத்தில் பைடன் கலந்துகொண்டார்.
இந்த நேரடி விவாதத்தில் ஜோ பைடன் பேசுவதற்கு சிரமப்பட்டதால், இப்படியொரு நிலையில் அவர் ஜனாதிபதி தேர்தலிலிருந்து இடை விலகுவதே சிறந்தது என பல தரப்பினர் கூறி வந்தனர்.
அமெரிக்காவைப் பொறுவத்தவரையில், அந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அவராக முன்வந்து போட்டியிலிருந்து இடை விலகினால் மாத்திரமே மாற்று வேட்பாளரை அறிவிக்க முடியும் என்ற விதிமுறை உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அவர் தரப்பிலிருந்து விளக்கமொன்றை கொடுத்துள்ளார்.
அதில், “உங்கள் அனைவருக்கும் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். ஜனனாயகக் கட்சி வேட்பாளர் நான் தான். நான் போட்டியில் நீடிக்கிறேன். நான் இறுதிவரை போட்டியில் இருப்பேன். இந்த தேர்தலில் நாம் வெற்றியீட்டுவோம். ட்ரைம்பை வீழ்த்த எனக்கும் கமலா ஹாரிஸூக்கும் உதவி செய்யுங்கள்” என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதிலிருந்து ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தல் போட்டியிலிருந்து இடை விலக மாட்டார் என்பது தெளிவாகிறது.