சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது வீணானது !

சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது வீணானது !

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இப்பொழுது ஆட்சியல் உள்ள ஜனாதிபதி கூட தேர்தலில் போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது. உண்மையில் வேட்பாளர்கள் எல்லோரும் தெரிவு செய்யப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறுபான்மையை சேர்ந்தவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை, வெறுமனவே இரண்டு இலட்சம் மூன்று இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் எந்தவொரு நன்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கம் தொடக்கம் காணி பிரச்சினை போன்ற நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன, அவற்றை தீர்த்துத் தரக்கூடிய, வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை அடையாளம் கண்டு அவரை ஆதரிப்பதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலட்சக்கணக்கான வாக்குகளை கொடுத்து அவருடன் உடன்படிக்கையை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பொருத்தமானது. இது, என்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்கின்ற போது சட்டத்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம் உட்பட எல்லோரும் தவறிழைத்து விட்டன. இது தொடர்பாகவும் பட்டதாரிகளின் நியமனக் கோரிக்கைதொடர்பாகவும் கிழக்கு மாகாண அளுநரிடம் கலந்துரையாடி அவரை சந்திக்க வாய்ப்பு எற்படுத்தப்படும். ஜனாதிபதியின் கவனத்திற்கும் இவ்விடயத்தை கொண்டு செல்வோம்” என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )