மட்டக்களப்பில் பாரியளவு வெடி பொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பில் பாரியளவு வெடி பொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் நேற்று (10) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட அகழ்வுப் பணியின் போது பாரியளவிலான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 20,000 T-56 ரக துப்பாக்கி ரவைகள், 300 கண்ணிவெடிகள், 38 வெடி மருந்து பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )