தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
தாய்வானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் சக்திவாய்ந்த இரண்டு நில அதிர்வுகள் 6.1 மெக்னிடியூட் அளவில்
பதிவாகியுள்ளன.
அதன்படி, முதலாவது நில அதிர்வு 24.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஹுவாலியன் கடற்கரையைத் தாக்கியுள்ளது.
அதே சமயம் இரண்டாவது நில அதிர்வு 18.9 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவானதாக தாய்வானின் வானிலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
தாய்வானில் இம்மாத ஆரம்பத்தில் 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 1,000க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.